சென்னை: பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக #IWD2023 அமையட்டும்! பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்பு ஆகியவற்றைத் தமிழகத்தின் ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதி செய்வதே நமது திராவிட மாடல்! பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை!” இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக #IWD2023 அமையட்டும்!
பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்பு, ஆகியவற்றைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதிசெய்வதே நமது திராவிட மாடல்!
பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை!#மகளிர்உயர_மாநிலம்உயரும் https://t.co/E7ifGUlnB6
— M.K.Stalin (@mkstalin) March 8, 2023