புதுடில்லி:புதுடில்லி மற்றும் வட மாநிலங்களில் கடந்த நவம்பர் மாதம் துவங்கிய பனிப்பொழிவு, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் அதிகமாக இருந்தது.
கடந்த மாதம் முதல் புதுடில்லி, பஞ்சாப், ஹரியானா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் கோடை காலம் துவங்கியுள்ளது.
இருப்பினும், ராஜஸ்தான் மற்றும் ம.பி., மாநிலங்களின் ஒரு சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், புதுடில்லியில் குளிர்ந்த சூழல் நிலவுகிறது.
இதனால், இங்கு வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும், அடுத்த மூன்று வாரங்களில், வெயிலின் தாக்கம் இயல்பைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
படிப்படியாக அதிகரிக்கும் வெப்பம் காரணமாக புதுடில்லி மற்றும் நாட்டின் வடமேற்கு பகுதியில் குறிப்பிடத்தக்க வகையில் வெயிலின் தாக்கம் உயரும் என கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement