
ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து விவாதிக்க, அனைத்துக்கட்சிக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என, பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்டத்தடை சட்ட முன்வடிவை, தமிழக அரசு மீண்டும் நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்தின் 246 மற்றும் 162-வது பிரிவின் படி, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை மாநில அரசுகள் இயற்றவும், சூதாட்டத்தை தடை செய்ய அதிகாரம் உள்ளதாகவும் மத்திய அரசும், நீதிமன்றமும் கூறியுள்ளதாகவும் அன்புணி குறிப்பிட்டார்.