இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு வீட்டை விற்ற ரஷ்ய கோடீஸ்வரர் மர்ம மரணம்: வெளிவரும் அவரது பின்னணி


அமெரிக்காவில் ஹரி- மேகன் தம்பதிக்கு வீட்டை விற்ற ரஷ்ய கோடீஸ்வரர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளாடிமிர் புடினை விமர்சித்தவர்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் வைத்து அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.
56 வயதான Sergey Grishin ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சித்தவர் மட்டுமின்றி,

இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு வீட்டை விற்ற ரஷ்ய கோடீஸ்வரர் மர்ம மரணம்: வெளிவரும் அவரது பின்னணி | Mystery Russia Scarface Oligarch Dies

@thesun

அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை தொடர்பு கொண்டு, தமக்கு பாதுகாப்பு வேண்டும், அமெரிக்க கடவுச்சீட்டு ஒன்றை அனுமதியுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தற்போது மூளைக்கு ரத்தம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நிர்வாகத்தையும் அரசாங்க அதிகாரிகளையும் கடுமையாக விமர்சித்த Sergey Grishin, அனைவருமே கொடூரர்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆனால், சமீப ஆண்டு காலமாக Sergey Grishin மாஸ்கோவில் தான் வசித்து வந்தார். அமெரிக்காவில் இவருக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்றை 12 மில்லியன் பவுண்டுகளுக்கு இளவரசர் ஹரி – மேகன் தம்பதிக்கு விற்றுவிட்டார்.

இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு வீட்டை விற்ற ரஷ்ய கோடீஸ்வரர் மர்ம மரணம்: வெளிவரும் அவரது பின்னணி | Mystery Russia Scarface Oligarch Dies

@thesun

மொத்தம் 7 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அந்த வளாகத்தை 2009ல் Sergey Grishin வாங்கியிருந்தார்.
மட்டுமின்றி 1983ல் பிரபலமான ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற குடியிருப்பு ஒன்றை Sergey Grishin வாங்கிய பின்னர், அவரை அமெரிக்க மக்கள் Scarface என புனைப்பெயரிட்டு அழைக்கத் தொடங்கினர்.

அசுரவேக வலர்ச்சி கண்ட Sergey Grishin

ரஷ்யாவில் வங்கி ஒன்றின் நிறுவனர்களில் ஒருவரான Sergey Grishin அசுரவேக வலர்ச்சி கண்டதன் பின்னர், 1990களில் ரஷ்ய வங்கிகள் மொத்தத்தையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.

இளவரசர் ஹரி- மேகன் தம்பதிக்கு வீட்டை விற்ற ரஷ்ய கோடீஸ்வரர் மர்ம மரணம்: வெளிவரும் அவரது பின்னணி | Mystery Russia Scarface Oligarch Dies

@thesun

அத்துடன் 60 பில்லியன் டொலர் அளவுக்கு முறைகேடும் அம்பலமானது.
மட்டுமின்றி, வங்கி காசோலைகளில் முறைகேடு செய்து பல ஊழல்களில் இவர் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.