தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “ஒரு ஆரோக்கியமான வீடு : சமூக உற்பத்தி திறன் ஊக்குவிப்பு திட்டத்தின்” அறிமுக கலந்துரையாடல் (08) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் குறித்த திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் வழிவகைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தில் இதற்காக 1920 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
உற்பத்தி திறன் செயற்பாடுகளை இதுவரை காலமும் அலுவலக மட்டங்களில் பரவலாக முன்னெடுக்கப்பட்டுள்ள திலையில்
அடுத்துவரும் காலங்களில் பொதுமக்கள் தமது வீடுகளிலும் உற்பத்தி திறன் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இச் செயற்றிட்டம் வழி வகுப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எனவே இதனூடாக உற்பத்தி திறன் செயல்பாடுகள் மற்றும் நன்மைகள் சாதாரண பொது மக்களுக்கு சென்றடைய வேண்டும். அதனூடாக அவர்கள் உச்ச பயனை பெறவேண்டும்.
இதற்காக செயல்திட்டத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்..
Logini Sakayaraja