ஒட்டாவா : ‘கனடாவில் கருகலைப்புக்காக தண்டனை பெற்றவர்கள் மீதான குற்றங்கள் நீக்கப்படும்’ என அந்நாட்டு அரசு அறிவித்தது.
வட அமெரிக்க நாடான கனடாவில் கருகலைப்புகள் மீதான தடைகள் 1988ல் நீக்கப்பட்டது. ஓரின சேர்க்கையாளர்கள் மாற்று பாலினத்தவர்கள் திருநங்கையர் சந்தித்து நேரம் செலவிட பிரத்யேக விடுதிகள் நடத்துபவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வந்தன. இது 2019ல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கருகலைப்பு மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான விடுதி நடத்தியதற்காக தண்டனை பெற்றவர்கள் மீதான குற்றங்கள் நீக்கப்படும் என கனடா மக்கள் பாதுகாப்புத்துறை அமைச்ச் மார்கோ மெண்டிசினோ நேற்று முன் தினம் அறிவித்தார்.
குற்றங்களை நீக்குவதற்கு இலவசமாக விண்ணப்பிக்கலாம் இறந்தவர்கள் மீதான குற்றங்களை நீக்க அவரது குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement