கோயம்புத்தூர்-திருச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள இராமநாதபுரம் மேம்பாலத்தில் இன்று காலை பெண் ஒருவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த வாடகை கார் பெண்ணின் கார் மீது மோதியது.
இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த அந்த பெண் உடனே காரை நிறுத்தி விட்டு, வாடகை காரை ஓட்டிவந்த ஓட்டுனரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த கால் டாக்ஸி ஓட்டுநர் கத்தியை எடுப்பது போன்று அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தியை காட்டி மிரட்ட பார்க்கிறாயா? என்று கேள்வி கேட்டபடி அந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைதொடர்ந்து போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரு தரப்பினரும் சமாதானமாக போவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் கார் சேதமானதை சரி செய்வதற்கு வடக்கை கார் ஓட்டுனரிடம் 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் வாங்கி பெண்ணிடம் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் சமாதானமாக சென்றனர்.