தொப்பூர் வனப்பகுதியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: 19,000 மரக்கன்றுகளை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் தோப்பூர் வனப்பகுதியில் வளர்க்கப்படும் 19,000 மரக்கன்றுகளை பாதுகாக்க டிராக்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணியினை வனத்துறை மேற்கொண்டுள்ளது. தர்மபுரி வனதுறை வனசரகை எல்லைக்குட்பட்ட தொப்பூர் காப்பு காட்டில் 38 ஹெக்டேர் பரப்பளவு தேர்வு செய்யப்பட்டு கடந்த 2019 – 20அம் ஆண்டில் 19,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த வனத்தில் புங்கன், வேம்பு, ஆயான், நாவல், இலுப்பை, விலா, வில்வம், ஜம்பு போன்ற மரங்களும் கொங்கு சந்தனம், வேங்கை போன்ற அரியவகை மரங்களும் நடவு செய்யப்பட்டுள்ளன. பறவைகள், குரங்கு, மான்கள் போன்ற விலங்குகள் இங்கு அதிகம் காணப்படுகின்றன. இந்நிலையில் கடும் வெயில் பாதிப்பிலிருந்து செடிகளை காக்க வன பணியாளர்கள் 10 பேர் இதர பணியாளர்கள் 30 பேர் என மொத்தம் 40 பேர் தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.