படம்! – குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

அப்பா எனக்கு செல்போன் வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டார். லேட்டஸ்ட்  மாடலாம்.  கும்பகோணத்துலேந்து பஸ்ல வந்திட்டு இருக்கேன்னு அம்மாவுக்கு போன் பண்ணிட்டார். அவருக்காக காத்துக்கிட்டு இருக்கிறேன்.

“ஏங்க அவன் மேல ஒரு கண்ணு வைங்க…செல்போன்ல  கண்டத பாத்து கெட்டு போயிட போறான்…” – நேத்து ராத்திரி  அப்பாகிட்ட அம்மா சொன்னது  போர்வைக்குள்ள முழிச்சிட்டு இருந்த எனக்கு கேட்டது. 

 “நல்லதை நினை…நல்லதே நடக்கும்…”

அப்பா சமுத்திரகனியாய் மாறி அட்வைஸ் பண்ணியதை  கேட்டு அம்மா வாயை மூடினாள்.

Representational Image

“நான்…நீ…அப்பா மூணு பேரும் சேர்ந்து புது செல்லுல முதல் போட்டோ எடுத்துக்கணும்…” -அப்பா வீட்டுக்குள் வந்த உடனே புது செல்போனை   பார்த்த அம்மா ஆர்வமாக சொன்னதும் “அத உன்னோட பேஸ் புக்ல போட்டு எல்லாரையும் கொல்லணும்…பேஸ் புக் நம்ம குடும்ப ஆல்பம் இல்ல…  அது சமூக வலைத்தளம் புரிஞ்சுக்க…” 

வழக்கம் போல அப்பா கிளாஸ் எடுக்க  செல்போனை அப்பாவிடம்  வாங்கி    அவசர அவசரமாக வீட்டுக்கு வெளியே வந்து  மிக மிக பக்கத்தில் இருப்பது போல் தெரிந்த பவுர்ணமி நிலாவை படமெடுத்தேன்… மாடி ரூமில் தனித்து விடப்பட்ட  சினிமாவில் சிறந்த ஸ்டில் போட்டோகிராபராக ஒரு காலத்தில் பணியாற்றிய தாத்தாவிடம் காட்டி பாராட்டு வாங்க.

***

ரம்மியம்

இரவு மணி 11 திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குள்

காரை நிறுத்தினேன். ராமேஸ்வரம் டிராப் டியூட்டி முடிந்து திரும்பும் போது மன்னார்குடியில் பஸ்ஸுக்காக நின்று கொண்டிருந்த அந்த இருவரையும் ஏற்றிக்கொண்டு வந்தேன். வரும்போது சாலையில் எதிரே வரும் வாகனங்களின் பிரகாசமான லைட்டைப் பாத்து பாத்து கண்கள் உறுத்திக்கொண்டே இருந்தது.

Representational Image

“தம்பி எவ்வளவு தரணும்..” – கீழே இறங்கி நின்ற அந்த அம்மா கேட்க.. மூடிய கண்களை திறந்து “பஸ் சார்ஜ் கொடுங்க போதும்…சாருக்கு என்ன பிரச்சனை..?”

“என்ன சொல்றது…எல்லாம் ஆன்லைன் ரம்மி தான் காரணம். பாரின்லேந்து வந்து ஒரு. மாசம் கூட ஆகல சம்பாதிச்ச பணம் 5 லட்சத்தை விட்டுட்டார்.. அதுலேந்து ஒரே புலம்பல் பிரஷர் வேற ஏறிப்போச்சு… பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டோம்..

என்ன பண்றதுன்னு தெரியல… ரம்மி, ஜோக்கர் -ன்னு தூக்கத்தில் உளற ஆரம்பிச்சிட்டார்… அதான் இங்க சேக்க கூட்டிக்கிட்டு வந்தேன் ” – சோகத்தோடு சொல்லி முடித்து பணத்தை வாங்கிக்கொண்டு நான் கிளம்பும் முன் அவர் மறுபடியும் “என்னப்பா இது கார்ல இப்படி எழுதியிருக்கியே என்று சுட்டிக்காட்ட “நீங்க பாக்க கூடாதுன்னு நினைச்சேன்… பாத்துட்டீங்க… தர்ம சங்கடத்துடன் தொடர்ந்தேன் நான் சொந்தமாக கார் வாங்கி ஓட்டுற அளவுக்கு உயர்ந்ததுக்கு காரணம் என் மனைவி ரம்யா தான். அவள செல்லமா ‘ரம்மி ன்னு கூப்பிடுவேன். அதான் ‘ரம்மி டிராவல்ஸ்‌’ பேர் வச்சேன்…” என்று முடிக்க… அதிர்ச்சியுடன் என்னை அவர் பார்த்தார்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.