புதுடில்லி : துணை ஜனாதிபதியின் அலுவலகத்தில் பணியாற்றும் எட்டு அதிகாரிகள்,20 பார்லிமென்ட் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர்.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், ராஜ்யசபாவின் தலைவராகவும் உள்ளார்.
அவரது அலுவலகத்தில் பணியாற்றும் எட்டு அதிகாரிகளை, 20 பார்லிமென்ட் குழுக்களின் உறுப்பினர்களாக நியமித்து, ராஜ்யசபா செயலகம் நேற்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதில் நான்கு பேர் துணை ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள்.
ராஜ்யசபாவின் தலைவருக்கான அதிகாரத்தின்படி, இந்த நியமனங்களை ஜக்தீப் தன்கர் செய்துள்ளதாக, ராஜ்யசபா செயலகம் தெரிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement