புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் துவக்கம்| Budget Session of Puducherry Assembly begins

புதுச்சேரி: புதுச்சேரி 2023 – 24ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் தமிழிசை உரையுடன் இன்று (மார்ச்09) துவங்கியது.

கூட்டத்தொடரில் உரையாற்ற வருகை புரிந்த கவர்னர் தமிழிசை போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று சபாநாயகர் செல்வம் சட்டசபை மைய மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்.

இதனை தொடர்ந்து சட்டசபையில் கவர்னர் தமிழிசை உரையை வாசித்தார். அப்போது சட்டசபையில் இருந்த சுயேட்சை எம்.எல்.ஏ நேரு திடீரென எழுந்து, ‛மத்திய அரசே, மத்திய அரசே, வேண்டாம் வேண்டாம்.. புதுச்சேரிக்கு இரவல் கவர்னர் வேண்டாம்’ என்று எழுதப்பட்ட போஸ்டர் உடன் கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு எம்.எல்.ஏ நேரு அளித்த பேட்டி: புதுச்சேரியில் கவர்னராக உள்ள தமிழிசை எப்போது புதுச்சேரி வருகிறார். எப்போது போகிறார் என்று தெரியவில்லை. மக்கள் தேவைப்படும் நேரத்தில் அவரை சந்திக்க முடியவில்லை. கவர்னர் மாளிகையில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடத்துகிறார். இதுவரை எந்த குறையை அவர் நிவர்த்தி செய்து இருக்கிறார்.

பஸ் நிலையத்தில் எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு இல்லை, சுற்றுலா மாநிலமாக உள்ள புதுச்சேரியில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. தற்போது 13 மாநிலங்களுக்கு கவர்னர் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் புதுச்சேரி மாநிலத்தை மத்திய அரசு புறக்கணித்துள்ளது, இது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.