வடக்கில் மீண்டும் மாடுகளுக்கு இலம்பி நோய் Limpi disease – கால்நடை வைத்தியர்களை தொடர்புகொள்ள ஆலோசனை

வட மாகாணத்தில் மீண்டும் பெரிய அம்மை எனப்படுகின்ற இலம்பி நேய் Limpi disease தாக்கம் பரவி வருவதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் சுப்பிரமணியம் கஜரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இந்த நோய் ஒரு வைரஸ் நோயின் தாக்கமாகும். குறிப்பாக, நுளம்பு, ஈ மற்றும் உண்ணிகள் மூலம் இலகுவில் பரவக்கூடியதாகும். 2020ஆம் ஆண்டிலும் இந்நோயின் தாக்கம் ஏற்பட்டு, பூரண கட்டுப்பட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஏற்கெனவே நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்தி, அவற்றை பராமரிப்பதன் மூலம் இந்த நோயை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

தமது பகுதி கால்நடை போதானாசிரியர்கள் அல்லது கால்நடை வைத்தியர்களை தொடர்புகொண்டு இந்நோய்க்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு கால்நடை பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் நேற்று முன்தினம் (07) பல மாடுகளுக்கு அம்மை நோய் இனங்காணப்பட்டுள்ளதாகவும்   கடந்த இரண்டு வாரங்களில் குறித்த 8 மாடுகள் இறந்துள்ளதாகவும் இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்க பொருளாளரும் மருதங்கேணி கால்நடை வைத்தியருமான எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த மாட்டு தொழுவத்தில் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றன.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, இயக்கச்சி, பளை, உருத்திரபுரம் போன்ற பகுதிகளிலும் இதன் தாக்கத்தை அறிய முடிகிறது.

எனவே இன்நோய்த்தாக்கம் காரணமாக உங்கள் பகுதிகளில் ஏதேனும் நோய்களுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் அருகிள் உள்ள கால்நடை வைத்தியர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.