புதுடில்லி : குஜராத்தில் வெங்காய விலை வீழ்ச்சியடைந்து வருவதையடுத்து விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பு நிறுவனம் நேரடியாக இன்று முதல் கொள்முதல் செய்ய உள்ளதாக அறிவித்துஉள்ளது.
குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் வெங்காயம் அதிகளவு உற்பத்தி செய்யப்படுவதுடன் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இங்கு வெங்காயம் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக இவற்றின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் வரை கொள்முதல் செய்த நிலையில் தற்போது கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்வதால் விவசாயிகள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெங்காயம் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பு நிறுவனம் குஜராத்தில் வெங்காயத்தை இன்று முதல் கொள்முதல் செய்ய உள்ளது.
இதற்காக பாவ்நகர் கொண்டல் போர்பந்தர் ஆகிய இடங்களில் விவசாயிகளிடம் இருந்து வெங்காயத்தைசந்தை விலைக்கு ஏற்ப நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளன. தேவைக்கு ஏற்ப கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இதன் வாயிலாக விவசாயிகள் பயனடைவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement