Khushbu Sundar:நான் வெட்கப்படல, தப்பு செஞ்ச அவர் தான் வெட்கப்படணும்: குஷ்பு

8 வயதில் தந்தையால் பாலியல் தொல்லைக்கு ஆளான குஷ்புவின் லேட்டஸ்ட் பேட்டியை பார்த்த ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.

​குஷ்பு​நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. தனக்கு 8 வயது இருந்தபோது தந்தை தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கத் துவங்கினார் என்றார் குஷ்பு. 15 வயது வரை அது குறித்து யாரிடமும் கூறாமல் பயந்து இருந்த குஷ்பு ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தந்தையை எதிர்த்திருக்கிறார்.
​பதில்​தந்தையே தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை வெளிப்படையாக கூறிய குஷ்புவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இரண்டு வளர்ந்த மகள்களுக்கு தாயாக இருக்கும் குஷ்பு இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் தற்போது ஏன் தந்தை பற்றி பேச வேண்டும். அப்பாவை பற்றி இப்படி பேச குஷ்பு வெட்கப்பட வேண்டும் என விமர்சித்தார்கள். இந்நிலையில் அது குறித்து குஷ்பு பேட்டி ஒன்றில் பதில் அளித்திருக்கிறார்.

​Ajith, Vijay: அஜித் ஓகே, ஆனால் விஜய் பற்றி இப்படி சொல்லிட்டாரே எதிர்நீச்சல் மாரிமுத்து!

​உண்மை​குஷ்பு கூறியதாவது, நான் அதிர்ச்சிகரமான எதையும் தெரிவிக்கவில்லை. நடந்ததை தான் அப்படியே சொல்லியிருக்கிறேன். நான் சொன்னதற்காக வெட்கப்படவில்லை. ஏனென்றால் அது எனக்கு நடந்தது. எனக்கு அப்படி செய்தவர் தான் வெட்கப்பட வேண்டும் என்றார்.
​பெண்கள்​பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். எதுவும் தங்களை பாதிக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். என் தந்தை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி பேச பல ஆண்டகள் ஆனது. பெண்கள் இது பற்றி வெளிப்படையாக பேச வேண்டும். இப்படி எனக்கு நடந்திருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி என் பயணம் தொடரும் என பெண்கள் கூற வேண்டும் என்கிறார் குஷ்பு.
​குழந்தைகள்​குழந்தைகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து பேச வேண்டும். ஆனால் பாலியல் தொல்லை கொடுப்பவர் குடும்ப உறுப்பினராகவோ அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்களாகவோ இருப்பதால் தான் பலர் வெளியே சொல்வது இல்லை. அப்படி வெளியே சொன்னால் இந்த சமூகம் என்ன கேள்விகளை எல்லாம் கேட்கும் என்பதே அவர்களின் பயம். ஆண்களை தூண்டும் அளவுக்கு அவள் என்ன உடை அணிந்தாள், தொல்லை கொடுத்தவருடன் நெருங்கிப் பழகினாரா என்கிற கேள்விகள் எழும் என பயம் என குஷ்பு மேலும் தெரிவித்துள்ளார்.

​ரசிகர்கள்​Khushbu: சுந்தர் சி. சிறைக்கு செல்வதை தடுக்க பாஜகவில் சேர்ந்தாரா குஷ்பு?குஷ்பு கூறியதை கேட்ட ரசிகர்கள் கூறியிருப்பதாவது, அவர் சொல்வது தான் சரி. பாதிக்கப்பட்ட பெண்கள் ஏன் பயப்பட வேண்டும், வெட்கப்பட வேண்டும். பாலியல் தொல்லை கொடுத்தவன் அல்லவா வெட்கப்பட வேண்டும். ஆனால் இங்கு எல்லாம் உல்டாவாக நடக்கிறது. பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமையை வெளியே சொன்னால் அவரை தான் குறை சொல்கிறார்கள் என தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.