Vijay: ஓடும் ரயிலில் ஏறி 40 பேர் எங்களை அதற்காக அடித்தார்கள்..விஜய் சொன்ன திடுக்கிடும் தகவல்..!

தமிழ் சினிமாவின் தளபதி கடந்த சில வருடங்களாக அவ்வளவாக பேட்டிகள் கொடுக்காமல் இருந்துவருகிறார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து பீஸ்ட் படத்திற்காக விஜய் சன் டிவியில் பேட்டி கொடுத்தார். இதுதான் கடந்த 10 வருடங்களில் விஜய் கொடுத்த ஒரே பேட்டி. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வரை விஜய் பல பேட்டிகளை கொடுத்துள்ளார்.

அதில் சகஜமாக பல விஷயங்களை விஜய் பகிர்ந்தும் இருக்கின்றார். அதுபோல தான் விஜய் சில வருடங்களுக்கு முன்பு பங்கேற்ற ஒரு பேட்டியில் திடுக்கிடும் தகவல் ஒன்றை கூறியுள்ளார். அந்த தகவல் தான் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

Vijay: வாரிசு விழாவில் விஜய் நடந்து கொண்ட விதம்..வெளிப்படையாக பேசிய ஷோபா சந்திரசேகர்..!

அதாவது விஜய் கல்லூரி படிக்கும் போது நடந்த சம்பவம் தான் அது. கல்லூரி காலகட்டங்களில் விஜய் அவரின் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு டூர் சென்றாராம். அதில் சில பெண் தோழிகளும் இருந்தார்களாம். அப்போது ட்ரைனில் போய்க்கொண்டிருக்கும் விஜய்யின் தோழிகளை இரண்டு பேர் கிண்டல் செய்துள்ளனர்.

இதனால் கடுப்பான விஜய் மற்றும் அவரது நண்பர்கள் அந்த இரண்டு போரையும் அடித்து கண்டித்துள்ளனர். இதையடுத்து அடுத்த ஸ்டேஷனில் கிண்டல் செய்த இரண்டு பேர்களின் ஆட்கள் நாற்பது பேர் ட்ரைனில் ஏறி விஜய் மற்றும் அவரின் நண்பர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் விஜய்யின் நண்பர்கள் சிலருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தான் விஜய் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். இவ்வளவு சீரியசான சம்பவத்தை விஜய் சிரித்துக்கொண்டே சொன்ன விதம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இதனை பார்த்த பிறகு விஜய் மீண்டும் பல பேட்டிகளை கொடுக்க வேண்டும் என்ற தங்களது ஆசையை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

என்னதான் விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் இசை வெளியீட்டு விழாவில் பேசினாலும், இதுபோல ஜாலியாக மிகவும் கேஷுவலாக பேசும் விஜய்யை நாங்கள் மிஸ் செய்கின்றோம் என ரசிகர்கள் கமன்ட் அடித்து வருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் விஜய் தற்போது இருக்கும் நிலையில் இதுபோல ஒரு பேட்டி கொடுப்பது என்பது நடக்காத விஷயமாகவே இருக்கின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.