அரியலூர்: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உருவப் படத்தை எரித்த அதிமுகவினர் 25 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை விட தனது தாய், மனைவி ஆகியோர் சக்தி வாய்ந்தவர்கள் என கருத்து தெரிவித்த அண்ணாமலையை கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. மீன்சுருட்டி கடைவீதியில், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் ராஜாரவி தலைமையில் அதிமுகவினர் அண்ணாமலை உருவப்படத்தை எரித்தனர். இதையடுத்து, 7 பெண்கள் உட்பட 25 பேரை மீன்சுருட்டி போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.