ஆளும் கட்சியின் அநீதியை எதிர்க்கும் போராட்டத்திற்கு மாநில அரசு தீர்வு காணுமா? அதிமுக கேள்வி

மதுரை: அரசு ஊழியர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து மக்களும், ஆளும் கட்சியின அநீதியை எதிர்த்து நடத்தும் போராட்டத்திற்கு அரசு தீர்வு காணுமா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், அரசு துறைகளிலே மிகவும் முக்கியமான தாய் துறையாக, முதன்மை துறையாக, அரசினுடைய முதுகெலும்பாக இருக்கும் வருவாய்த்துறை, ஒரு சேவை துறையாக  செயல்பட்டு வருவதை எல்லோரும் நன்றாக அறிவார்கள் என்று தெரிவித்தார்.

புரட்சித்தலைவர் காலத்திலும், புரட்சி தலைவி அம்மா காலத்திலும்,  அம்மாவினுடைய மறுபடிவமாக இருக்கிற எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் வருவாய் துறைக்கு மிக  அதிக முக்கியத்துவங்களை வழங்கப்பட்டது. இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு, வருவாய்துறையினரின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது. அதனால் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் என்று ஆளும் கட்சி மீது குற்றம் சாட்டினார். 

விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள்,  விலையில்லா வேஷ்டி சேலை திட்டம்,  பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து சான்றிதழ்களும்,, நில நிர்வாகம்,நில சீர்திருத்தம்  அதோடு சர்வே அண்ட் செட்டில்மெண்ட் என்று பல்வேறு நிலைகளிலே வருவாய் துறை செயல்பட்டு வருகிறது..

தற்போது வருவாய் துறை அலுவலர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவருடைய கோரிக்கையை  கேட்பதற்கு கூட, இந்த அரசு முன்வரவில்லை என்ற ஒரு வேதனையான செய்தி உள்ளது.தற்போது துணை ஆட்சியர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்  என்று வருவாய் துறையினர் போராடி வருகின்றனர் என்று உதயக்குமார் தெரிவித்தார்.

வட்டாச்சியாளராக இருந்து பதவி உயர்வில் வரக்கூடிய, அந்த துணை ஆட்சியர் பட்டியலை நிலுவையில் இல்லாமல், வட்டாட்சியராக இருந்து தங்களுடைய அனுபவத்தின் மூலமாக வரக்கூடிய   மூலமாக வரக்கூடிய அந்த துணை ஆட்சியர் பட்டியலை நிலுவையிலே இல்லாமல் வெளியிட்டவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் என்று தங்கள்ல் ஆட்சியை உதாரணம் காட்டினார் ஆர்.பி உதயக்குமார்.

மேலும் அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், துணை வட்டாட்சியர் பதவி பட்டியல் திருத்தம் காரணமாக, பதவி இறக்கம் பெரும் அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்புக்கு, உரிய ஆணைகள் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை எல்லாம் வலியுறுத்தி போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்தார் .

இது ஒரு புறத்தில இருநதாலும்,  மறுபுறம் மதுரையில் ஆவின் பால் தொடர் தாமதம் செயல்படுவதால், ஆவின் நிறுவனத்தை பால் முகவர்கள்  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார். பால் உற்பத்தியாளர்கள், தனியார் பால் நிறுவனங்களுக்கு பாலை விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருவதால், ஆவினுக்கு பால் வரத்து குறைந்து கொண்டே வருகிறது.

இதனால் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மதுரையில்  டிவிஎஸ் நகர், திருப்பாலை,  விளாங்குடி, ஆனையூர், நெல் பேட்டை,  சிம்மக்கல்  போன்று பல்வேறு பகுதிகளிலே, தொடர்ச்சியாக காலை 9 மணிக்கு தான் பால் வருகிறது என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தான் பால் வர தாமதம் ஏற்படுவதால் ஆத்திரமடைந்த பால் முகவர்கள் கொந்தளித்து கொதித்துப் போய், சாத்தமங்கலத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களின் பகுதிகளுக்கு பால் பாக்கெட் ஏற்றிக்கொண்டு பால் வாகனம் புறப்பட்டது, ஆனாலும் முகவர்கள் பாலை ஏற்க மறுத்து வாகனத்தை திருப்பி அனுப்பி வைத்த ஒரு போராட்டம் என்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் உண்மையான காரணமாக பார்த்தோமானால்,  ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு, ரூபாய் 7 உயர்த்தி அறிவிக்க கோரி தொடர் போராட்டம் இருக்கிறது .ஆகவே கொள்முதல் விலை குறைவாக இருக்கிற காரணத்தினால், தனியார் நிலையங்களுக்கு பால் உற்பத்தியாளர்கள் செல்ல வேண்டிய ஒரு நிலைமை ஏற்படுகிறது 

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆட்சியில், திமுக செயற்கையாக போராட்டங்களை உருவாக்கப்பட்டு ,பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

தற்போது திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் போராட்டம், நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை என்று போராட்டம், கல்வி கடன் ரத்து செய்யப்படவில்லை என்று போராட்டம், டெல்டா மாவட்டங்களை விவசாயிகள் கணக்கெடுக்கவே வரவில்லை என்கிற போராட்டம், நிவாரணம் கிடைக்கவில்லை என்கிற போராட்டம், சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாய் இருக்கிறது.

விலைவாசி உயர்வுக்கான போராட்டம், சொத்து வரி உயர்வுக்கு போராட்டம், மின்சார கட்டண உயர்வுக்கு போராட்டம், இப்படி தன்னெழுச்சியாக, மக்கள் பாதிக்கப்படுகிற காரணத்தினாலே, துன்பப்படுகிற காரணத்தினாலே, துயரப்படுகிற காரணத்தினாலே இந்த மக்கள் விரோத திமுக அரசை எதிர்த்து, தொடர் போராட்டங்கள் நடத்தி விடுவதை இந்த அரசு கனிவோடு பரிசினை செய்வதற்கு ஒரு நாளும் முன் வராது என்பதற்கான இந்த தொடர் போராட்டங்கள் சாட்சியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது .

அரசு ஊழியர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தர மக்களும், ஆளும் கட்சியின அநீதியை எதிர்த்து நடத்தும் போராட்டத்திற்கு அரசு தீர்வு காணுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.