ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தாயார் மறைவு…!

மெல்போர்ன்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது.

இதில் முதலில் பேட்டிங் ஆடி வரும் ஆஸ்திரேலியா கவாஜாவின் சதத்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட கேப்டன் பேட் கம்மின்ஸ் 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகு குடும்ப வேலை காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார்.

அவர் சொந்த ஊருக்கு திரும்பியதற்கான காரணம் கூறப்படாமல் இருந்தது. இந்நிலையில், பேட் கம்மிஸின் தாயார் மரியா கம்மின்ஸ் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது தாயின் உடல் நலம் குன்றியதன் காரணமாகவே அவர் ஆஸ்திரேலியா திரும்பி உள்ளார். பேட் கம்மின்ஸ் தாயார் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளுக்கு ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்தி வருகிறார். இதில் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.