இலங்கையில் தங்கத்தின் விலையில் ஒரு வாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி தங்கப்பவுணொன்றின் விலை ஒரு வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தங்கத்தின் விலை
இதேவேளை, தங்கத்தின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் நகைக்கடைகளில் நெருக்கடி நிலை பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளதன் காரணமாக உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொழும்பு செட்டியார்த்தெருவில் இன்றைய தினம் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 155,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது இன்றைய தினம் 143,400 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.