
எதிர்நீச்சல் : காயத்ரி கிருஷ்ணனுக்கு வந்த சோதனை
எதிர்நீச்சல் தொடரில் ரவுடி பெண்ணாக நடிப்பில் அசத்தி வருகிறார் காயத்ரி கிருஷ்ணன். அண்மையில் இவர் எதிர்நீச்சல் ஷூட் முடிந்தவுடன் சிகிச்சைக்காக ஹாஸ்பிட்டல் செல்வதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஏனெனில், வெற்றிலை போட்டே பழக்கம் இல்லாத காயத்ரி கிருஷ்ணன், இந்த கதாபாத்திரத்திற்காக வெற்றிலை போடும் நபராக நடித்து வருகிறார். வெற்றிலையுடன் சுண்ணாம்பு பயன்படுத்துவதால் அவரது வாய் புண்ணாகிவிடுகிறது. எனவே, எதிர்நீச்சல் சீரியலுக்காக தொடர்ந்து இரண்டு நாட்கள் நடிக்க சென்றால் ஷூட் முடிந்தவுடன் நேரே டாக்டரை பார்க்க சென்றுவிடுகிறாராம். நடிக்க போனா இப்படியெல்லாமா சோதனை வரும்?