காஷ்மீர் குறித்து அமெரிக்க நாளிதழ் தலையங்கம்: இந்தியா கடும் கண்டனம்| “Indians Will Not Allow…”: Minister On The New York Times Op-Ed On Kashmir

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: காஷ்மீர் பற்றிய தகவல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அமெரிக்காவை சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பொய் மற்றும் கற்பனையான தகவல்களையும், இந்தியா குறித்து பொய் செய்திகளையும் பரப்பி வருவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவை சேர்ந்த நாளிதழ், இந்தியா குறித்து செய்தி வெளியிடும் போது நடுநிலையை கடைபிடிப்பதை நீண்ட நாட்களுக்கு முன்னரே நிறுத்திவிட்டது.

அந்த நாளிதழ், காஷ்மீர் குறித்த செய்தியை தவறான மற்றும் கற்பனையாக வெளியிட்டு உள்ளதுடன், இந்தியா மற்றும் அதன் ஜனநாயக அமைப்புகள் குறித்து பொய் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் வெளியிட்டு உள்ளது.

இந்தியா குறித்தும், ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் பொய் பரப்புவது என்ற, அமெரிக்க நாளிதழ் மற்றும் அதேபோன்று ஒத்த எண்ணம் கொண்ட வெளிநாட்டு மீடியாக்களின் முயற்சியின் ஒரு பகுதியாக தற்போது காஷ்மீர் குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த பொய் செய்திகள் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது.

இந்தியா மீதும், நமது பிரதமர் மீதும் நீண்ட காலமாக வெறுப்புணர்வை வளர்க்கும் எண்ணம் கொண்ட சில வெளிநாட்டு மீடியாக்கள், நீண்ட காலமாக நமது ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய பொய்களை பரப்ப முயற்சித்து வருகின்றனர்.

latest tamil news

இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் என்பது மற்ற அடிப்படை உரிமைகளை போல் புனிதமானது. நமது மக்கள் முதிர்ச்சி பெற்றவர்கள். ஜனநாயகம் குறித்து யாரும் நமக்கு பாடம் எடுக்க தேவையில்லை. காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் குறத்து நியுயார்க் டைம்ஸ் நாளிதழின் செய்தி கண்டனத்திற்குரியது. இத்தகைய திட்டங்களை இந்திய மண்ணில் வெற்றி பெற இந்திய மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.