சென்னை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை குற்றவாளிமீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினரின் கஸ்டடியில் இருக்கும்போது, குற்றவாளியால் எப்படி துப்பாக்கியால் சுட முடிந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி சத்தியபாண்டியை கடந்த மாதம் (பிப்ரவரி) 12ஆம் தேதி ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது. […]