பீஜிங்: சீன வரலாற்றில் முதன்முறையாக, அதிபல் ஜி ஜின்பிங் 3வது முறையாகவும் அந்நாட்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகின் சக்தி தலைவர் களில் ஒருவரான, 69 வயதாகும் ஜின்பிங், தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியின்றி ஒருமனதாக சீன அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜிஜின்பிங் 2013ம் ஆண்டு சீனா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, ஏழு உயர் தலைமைப் பதவிகள் மற்றும் இரண்டு டஜன் மூத்த அதிகாரிகள் உட்பட சுமார் 1.5 மில்லியன் அரசாங்க அதிகாரிகளைத் தண்டித்தார். […]
