அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார், மேலும் படத்தில் யோகி பாபு மற்றும் ப்ரியாமணி ஆகியோர் நடிக்கின்றனர், இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வட இந்தியாவில் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. மாஸ்டர், உபென்னா மற்றும் விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார்.
இதனிடையே மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரக்கூடிய ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக நடிகை நயன்தாரா தற்போது மும்பை சென்றுள்ளார். இதில் நடிகை விஜய்சேதுபதி மற்றும் ஷாருக்கானின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் இந்த வருடம் ஜூன் 2ம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. நடிகர் விஜய் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது ஷாருக் கானின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது அவரது ஜவான் படத்தின் காட்சியின் கசிந்த வீடியோ என்று கூறப்படுகிறது. வீடியோவில் ஷாருக் ஆக்ஷன் செய்வது போல் தெரிகிறது. அதே சமயம் இதை பார்த்த அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் சிந்துள்ள காட்சிகளே உணர்த்துவதாக ரசிகர்கள் டிரெண்டிங்கை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
Make a way y’all Raj Vardhan Thakur is here
another all time Blockbuster is coming #Jawan pic.twitter.com/jFSTOFUQtr— Srk (@lovesrkpriyanka) March 10, 2023
முன்னதாக கடந்த ஜனவரி 25 ஆம் தேதி நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளியாகி 1000 கோடி வசூலை ஈட்டியது. அதன்படி தற்போது ஜவான் படமும் அடுத்த 1000 கோடி சாதனையை செய்யும் என தற்போது லீக்கான சண்டைக் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் கூறி வருகின்றனர்.