டாஸ்மாக் டெண்டர் முறைகேடு? அறப்போர் இயக்கத்துக்கு செந்தில் பாலாஜி எச்சரிக்கை..!

தமிழக முதல்வர்

நாளை 11 ந்தேதி, கோவை கருமத்தம்பட்டியில், விசைத்தறியாளர்கள் நன்றி தெரிவித்து நடத்தும், பாராட்டு விழாவில் பங்கேற்க உள்ளார். இந்த விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில்; தமிழக முதல்வருக்கு விசைத்தறி நெசவாளர்கள் சார்பில் கருமத்தம்பட்டியில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில், பல ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அதற்கான விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்றார். மேலும், டாஸ்மாக் டெண்டர் விவகாரம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு, டாஸ்மாக் டெண்டர் தொடர்பாக அறப்போர் இயக்கம் ஜெயராமன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் அவர் மீது வழக்கறிஞர் மூலம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற்றதால், 43 குடோனில் இருந்து மொத்தம் 96 கோடி ரூபாய்கான டெண்டர் வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டது. அறப்போர் இயக்கத்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர் என்பது அபத்தமானது, அவர் திரும்ப பெறவில்லை எனில், நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மேலும் இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். அதில், மாநிலம் முழுவதிலும் 41 டாஸ்மாக் குடோன்களில் இருந்து பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கான டெண்டரின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.96 கோடி மட்டுமே. அறப்போர் இயக்கம் சொல்வது போல ரூ.1000 கோடி இல்லை. இடைத்தேர்தல் காரணமாக ஈரோடு தவிர்த்து பிற மாவட்டங்களில் டெண்டர் கோரப்பட்டது.

இந்த டெண்டரைப் பொறுத்தவரையிலும் டாஸ்மாக் தொடங்கப்பட்டதிலிருந்து எந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதோ அதே நடைமுறைதான் இப்பொழுதும் வெளிப்படையாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. அரைகுறையான – உண்மைக்குப் புறம்பான தகவல்களை அறப்போர் இயக்கம் இயக்கம் வெளியிட்டிருக்கிறது. விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டிருந்தால் அதனை உணர்ந்து குற்றச்சாட்டைத் திரும்பப்பெற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், பொதுமக்களிடம் அவப்பெயரை உண்டாக்க முயற்சி செய்ததற்காக

அறப்போர் இயக்கம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.