திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு மாநகர போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அந்த நபர் பாளை ஆயுதப்படையில் தலைமை காவலராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. அதன் பின்னர் அவரிடம் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்தது குறித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அந்த நபர் மதுபோதையில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சில நிமிடங்களில் இந்த வாக்குவாதம் முற்றியதால் பிரச்சினைகளை தடுப்பதற்காக போலீசார் ஆயுதப்படை தலைமை காவலரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்ததற்காக ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.
இதற்கிடையே ஆயுதப்படை தலைமை காவலர் மருத்துவ விடுப்பில் இருந்து சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது. அதன் பின்னர் அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.