திருமணமான மறுநாளே மனைவியை போக்குவரத்து நெரிசலில் விட்டுவிட்டு ஓடிய கணவன்! அம்பலமான அதிர்ச்சி உண்மை


இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணமான அடுத்த நாளே, தனது மனைவியை போக்குரவத்து நெரிசலின்போது காரிலேயே விட்டுவிட்டு கணவன் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரிலேயே மனைவியை விட்டு சென்ற கணவன்

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரைச் சேர்ந்தவர் விஜய் ஜார்ஜ். இவருக்கும் பெண்ணொருவருக்கும் கடந்த மாதம் 15ஆம் திகதி திருமணம் நடந்துள்ளது.   

அதற்கு மறுநாள் விஜய் ஜார்ஜ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு தேவாலயத்திற்கு காரில் சென்றுள்ளார்.

அவர்கள் சென்ற கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

அப்போது மணமகன் விஜய் திடீரென காரின் கதவை திறந்துகொண்டு சாலையில் ஓடியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, கணவரை விரட்டி சென்றுள்ளார். ஆனால் அவரால் கணவரைப் பிடிக்க முடியவில்லை. இதனால் விஜய் ஜார்ஜ் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

திருமணமான மறுநாளே மனைவியை போக்குவரத்து நெரிசலில் விட்டுவிட்டு ஓடிய கணவன்! அம்பலமான அதிர்ச்சி உண்மை | Newly Married Groom Abandons Wife In Traffic

அதனைத் தொடர்ந்து, குறித்த பெண்ணின் குடும்பம் மற்றும் விஜய்யின் குடும்பமும் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர்.

எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் புதுமணப்பெண் பொலிஸின் உதவியை நாடியுள்ளார்.

மிரட்டிய பெண்

காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில், தனது கணவர் கோவாவில் வேலை செய்தபோது பெண்ணொருவருடன் தொடரில் இருந்துள்ளார் என்றும், அதனை தன்னிடம் தெரிவித்ததுடன் அவரின் தொடர்பை முறித்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன் அந்த பெண் தன்னிடம் விஜய் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியதால், அவர் பயந்து ஓடிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், அப்பெண்ணின் மிரட்டலால் தன் கணவர் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.     

திருமணமான மறுநாளே மனைவியை போக்குவரத்து நெரிசலில் விட்டுவிட்டு ஓடிய கணவன்! அம்பலமான அதிர்ச்சி உண்மை | Newly Married Groom Abandons Wife In Traffic



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.