சென்னை: முத்திரைத்தாள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பதிவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் முத்திரை தாள்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து பதிவுத்துறை கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டுள்ளது. இதனையடுத்து பதிவுத்துறை முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, முத்திரைத்தாள்களில் குறிப்பிட்டுள்ள விலை அடிப்படையிலேயே அதனை விற்க வேண்டும் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் பத்திரப்பதிவுத்துறை […]
