மெஸ்ஸி, நெய்மர் உட்பட 4 PSG அணி வீரர்களுடன் எம்பாப்பே பேசவில்லை! வெளியான தகவல்


லியோனல் மெஸ்ஸி மற்றும் நெய்மர் உட்பட 4 பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) அணி வீரர்களுடன் கைலியன் எம்பாப்பே பேசவில்லை என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நான்கு PSG அணி வீரர்கள்

El Nacional-ன் அறிக்கையின்படி, பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) சூப்பர் ஸ்டார் கைலியன் எம்பாப்பே (), சமீபத்தில் அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) மற்றும் பிரேசில் வீரர் நெய்மர் (Neymar Jr.) உட்பட நான்கு அணி வீரர்களுடன் பேசவில்லை.

எம்பாப்பேவுக்கு மெஸ்ஸி மீது அந்த அளவிற்கு விருப்பம் இல்லை. அதுமட்டுமின்றி, மெஸ்ஸியின் கடும் போட்டியாளரான ரொனால்டோவின் (Cristiano Ronaldo) தீவிர ரசிகர், ரொனால்டோவை கிட்டத்தட்ட கடவுளைப் போல கொண்டாடுபவர் எம்பாப்பே.

மெஸ்ஸி, நெய்மர் உட்பட 4 PSG அணி வீரர்களுடன் எம்பாப்பே பேசவில்லை! வெளியான தகவல் | Kylian Mbappe Avoid 4 Psg Teammates Messi Neymarsportskeeda

மெஸ்ஸி மற்றும் நெய்மர்

மெஸ்ஸி மற்றும் நெய்மர் இருவரும் ஏற்கெனெவே பார்சிலோனாவில் ஒன்றாக விளையாடியுள்ளனர். இருவருக்கும் இடையில் நல்ல நட்புறவு உள்ளது.

அதே நேரம், மெஸ்ஸி மற்றும் நெய்மர் அணியில் இருக்கும் போதும் எம்பாப்பே பிஎஸ்ஜியின் நட்சத்திரமாக இருப்பதில் அவர்களுக்கு கோபம் இருப்பதாக கூறப்படுகிறது.

மெஸ்ஸி, நெய்மர் உட்பட 4 PSG அணி வீரர்களுடன் எம்பாப்பே பேசவில்லை! வெளியான தகவல் | Kylian Mbappe Avoid 4 Psg Teammates Messi NeymarGetty

கிம்பெம்பே & வெராட்டி

இந்த இருவரைத் தவிர, எம்பாப்பே சகநாட்டவரான பிரெஸ்னல் கிம்பெம்பே (Presnel Kimpembe) மற்றும் இத்தாலிய வீரர் மார்கோ வெராட்டி (Marco Verratti) ஆகியோருடனும் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

Mbappe மற்றும் Kimpembe நண்பர்கள் அல்ல, எதிரிகளும் அல்ல. அவர்கள் எப்போதும் நெருக்கமாக இருந்ததில்லை. அதேநேரம், எம்பாப்பே மார்கோ வெராட்டிக்கு இடையே பொறாமை இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.

2017-ல் Mbappe வருவதற்கு முன்பு மார்கோ வெராட்டி அணி உரிமையாளருக்கு மிகவும் பிடித்தவர். எனவே, அந்த பட்டத்தை இழப்பது இத்தாலியருக்கு பிடிக்கவில்லை.

இவர்கள் நால்வரிடமும் எம்பாப்பே சரியாக பேசுவதில்லை என சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.