லண்டனில் வீட்டிற்குள் இறந்து கிடந்த தாய் மற்றும் 2 மகன்கள்: காரணம் புரியாமல் விழி பிதுங்கும் பொலிஸார்


பிரித்தானியாவில் தாய் மற்றும் இரண்டு மகன்கள் வீட்டிற்குள் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய் மற்றும் 2 மகன்கள் உயிரிழப்பு

பிரித்தானியாவில் தாய் மற்றும் இரண்டு மகன்கள் தொடர்பான கவலைகள் அக்கம்பக்கத்தினாரால் எழுப்பப்பட்ட பிறகு, தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்வெடெரில்(Belvedere) உள்ள மாடி வீட்டுக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

அதனடிப்படையில், நேற்று இரவு மொட்டை மாடியில் உள்ள வீட்டிற்கு வந்த பொலிஸார், தாயார் நட்ஜா டி ஜாகர்(Nadja De Jager, 47) அவரது இரண்டு மகன்கள் அலெக்சாண்டர்(9) மற்றும் மாக்சிமஸ்(7) ஆகிய மூன்று பேர் இறந்து கிடப்பதை கண்டறிந்தனர். 

லண்டனில் வீட்டிற்குள் இறந்து கிடந்த தாய் மற்றும் 2 மகன்கள்: காரணம் புரியாமல் விழி பிதுங்கும் பொலிஸார் | Uk Mum And Two Son Being Found Dead Inside HomeMetropolitan police

உயிரிழப்புக்கான காரணம் தெரியாத நிலையில், துப்பறியும் அதிகாரிகள் விசாரணை தொடர்பாக வேறு யாரையும் தீவிரமாகத் தேடவில்லை.

இருப்பினும் மூவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட உள்ளன.

அத்துடன் விசாரணை தொடர்ந்து வரும் துப்பறியும் இன்ஸ்பெக்டர் ஒல்லி ஸ்ட்ரைட், “இது மிகவும் சோகமான வழக்கு, இந்த சோகமான சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை நாங்கள் தொடர்ந்து நிறுவி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

லண்டனில் வீட்டிற்குள் இறந்து கிடந்த தாய் மற்றும் 2 மகன்கள்: காரணம் புரியாமல் விழி பிதுங்கும் பொலிஸார் | Uk Mum And Two Son Being Found Dead Inside Homemet


உறவினர்களுக்கு ஆதரவு

நட்ஜா டி ஜாகர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உயிரிழப்பு குறித்து அவர்களின் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள்  சிறப்பு அதிகாரிகளால் தொடர்ந்து ஆதரிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லண்டனில் வீட்டிற்குள் இறந்து கிடந்த தாய் மற்றும் 2 மகன்கள்: காரணம் புரியாமல் விழி பிதுங்கும் பொலிஸார் | Uk Mum And Two Son Being Found Dead Inside Homemet

லண்டனில் வீட்டிற்குள் இறந்து கிடந்த தாய் மற்றும் 2 மகன்கள்: காரணம் புரியாமல் விழி பிதுங்கும் பொலிஸார் | Uk Mum And Two Son Being Found Dead Inside HomePA



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.