வில்லன் ஆன தருண் கோபி

விஷால் நடித்த 'திமிரு' படத்தை இயக்கியவர் தருண் கோபி. அதன்பிறகு 'திமிரு 2' படத்தை இயக்கினார். மாயாண்டி குடும்பத்தார் படம் மூலம் நடிகர் ஆனார். தற்போது 'மூத்தகுடி' என்ற படத்தின் மூலம் வில்லன் ஆகியிருக்கிறார்.

தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்கும் படம் மூத்தகுடி. ரவி பார்கவன் இயக்கி உள்ளார். அன்விஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், ராஜ் கபூர், சிங்கம்புலி, யார் கண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு கே.ஆர்.விஜயா நடித்துள்ளார். முருகானந்தம் இசை அமைத்துள்ளார். ரவிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் ரவி பார்கவன் கூறியதாவது: நிஜத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது தான் இப்படம். உண்மை சம்பவத்தை மிக அழகான திரைக்கதையாக மாற்றியுள்ளேன். மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் அந்தந்த காலகட்டத்தில் பயன்படுத்திய பொருட்களை தேடிப்பிடித்து படத்தில் பயன்படுத்தியுள்ளோம். திரையில் நீங்கள் பார்க்கும்போது அந்த காலகட்டத்தில் வாழும் அனுபவத்தை தரும். மூத்த நடிகை கே. ஆர்.விஜயா இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கோவில்பட்டி, திருநெல்வேலி, சாத்தூர், கயத்தாறு, எட்டையபுரம் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.