390 என்ற மோசமான பெறுமதியை அடைவுள்ள இலங்கை ரூபாய்


 அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என ஃபிட்ச் நிறுவன மதிப்பீடுகள் கணித்துள்ளது.

சமகாலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் மாறியுள்ளது, ஆனால் வருட இறுதியில் இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 20 வீதத்தால் வீழ்ச்சியடையும் என ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

390 என்ற மோசமான பெறுமதியை அடையவுள்ள இலங்கை ரூபாய் | 390 To Sri Lankan Rupee Which Has A Poor Value

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை இலங்கை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பலவீனமடைந்து வரும் பொருளாதார நிலைமைகள் மற்றும் வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு அது ஒரு சவாலாக இருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 390 ஆக குறையலாம் என ஃபிட்ச் நிறுவனம் கணித்துள்ளது.

390 என்ற மோசமான பெறுமதியை அடையவுள்ள இலங்கை ரூபாய் | 390 To Sri Lankan Rupee Which Has A Poor Value

டொலரின் உள்வருகையினால் ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருகிறது. எனினும் வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்த ஆரம்பிக்கும் போது நெருக்கடி நிலை ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்டமாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களாதேஷிற்கு கடனாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.