Chinmayi, Vairamuthu: 'காம வெறியர்களை கேட்கவில்லை'.. வைரமுத்துவை கன்னாபின்னாவென விளாசிய சின்மயி!

பிரபல பாடகியான சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது மீடூவில் பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து பாடகி சின்மயிக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்தன. வைரமுத்துவின் ஆதரவாளர்கள் பாடகி சின்மயியை தரக்குறைவாகவும் ஆபாசமாக சமூக வலைதளங்களில் சா டி வந்தனர்.

Agilan Review: ஒன் மேன் ஷோ… ஜெயம் ரவியின் ‘அகிலன்’ படம் எப்படி? டிவிட்டர் விமர்சனம்!

இருப்பினும் அதற்கெல்லாம் அஞ்சாத பாடகி சின்மயி, தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். நேற்று முன்தினம் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் மகளிர் தின வாழ்ததுக்களை பதிவிட்டு வந்தனர்.

அந்த வகையில் பாடலாசிரியரான வைரமுத்து மகளிர் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை வடிவிலான பதிவு ஒன்றை ஷேர் செய்திருந்தார்.

அவர் பதிவிட்டிருந்ததாவது,

“மாலையும் நகையும்

கேட்கவில்லை பெண்;

மதித்தல் கேட்கிறாள்

வீடும் வாசலும்

விரும்பவில்லை பெண்

கல்வி கேட்கிறாள்

ஆடம்பரம் அங்கீகாரம்

ஆசைப்படவில்லை பெண்;

நம்பிக்கை கேட்கிறாள்

கொடுத்துப் பாருங்கள்;

அவளே பாதுகாப்பாள்

ஆண்களையும் உலக மகளிர் திருநாள் வாழ்த்து” என வாழ்த்து கூறியிருந்தார்.

Naresh, Pavithra Lokesh: 2 முறை விவாகரத்தான நடிகையை 4வது திருமணம் செய்த சூப்பர் ஸ்டாரின் அண்ணன்!

இதனை பார்த்த பாடகி சின்மயி, வைரமுத்துவின் வாழ்த்து கவிதைக்கு பிதில் அளித்துள்ளார். அதில், அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது காம வெறியர்களை கேட்கவில்லை பெண். பாதுகாப்பு கேட்கிறாள். பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூறு கேட்கவில்லை பெண்: நியாயம் கேட்கிறாள் என குறிப்பிட்டு, இவர் பெண்களின் பாதுகாப்பு குறித்து எப்படி பேசுகிறார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என தெரிவித்துள்ளார்.

Aishwarya Rajinikanth: திடீரென செல்வா அத்தானை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… காரணம் இதுதானாம்!

சின்மயியின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் இடம்பெற்ற நீ ஒரு தெய்வம் தந்த பூவே பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார் சின்மயி. தொடர்ந்து ஏஆர் ரஹ்மான் உட்பட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வருகிறார் சின்மயி. தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளையும் குவித்துள்ள சின்மயி பெண்கள் பாதுகாப்புக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.