Trisha, Ponniyin Selvan 2: த்ரிஷா ஷேர் செய்த ஒத்த போஸ்ட்… சொக்கி போன ரசிகர்கள்!

திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக கோலொச்சி வருபவர் நடிகை த்ரிஷா. ஜோடி படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்த த்ரிஷா, அடுத்தடுத்து சூர்யா, அஜித், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார் த்ரிஷா.

Vignesh Shivan, Nayanthara: கதை அப்படி போகுதோ… அஜித்தை பழிதீர்க்கும் விக்னேஷ் சிவன்?

நடிகை த்ரிஷா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படம் காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகிறது. த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மைய்யப்படுத்தி இயக்குநர் மணி ரத்னம் இந்தப் படத்தை உருவாக்கி இருந்தார்.

இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, ஜெயராம், ஷோபிதா துலிபாலா, ஐஸ்வர்ய லட்சுமி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.

Actress: கல்யாணமானதை மறந்து ரெண்டு எழுத்து நடிகரே கதி என கிடக்கும் நடிகை…

வரும் ஏப்ரல் 28ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான புரமோஷன்கள் இப்போதே விறுவிறுப்பாக தொடங்கி விட்டது. ‘பொன்னியின் செல்வன் – பாகம் 1’ படத்தில் குந்தவை கதாபாத்திரத்திற்காக எடுக்கப்பட்ட த்ரிஷாவின் போட்டோஷூட் வீடியோவை நேற்று பகிர்ந்த லைகா நிறுவனம், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான First Single அப்டேட்டை வெளியிட்டது.

ப்ச்… அந்த கொடுப்பனை இல்ல… பாவம்தான் தனுஷ்!

இதனை தொடர்ந்து தனது குந்தவை கெட்டப் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை த்ரிஷா. த்ரிஷாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் உயிர் உங்களுடையது தோழி என கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் இடம்பெற்றுள்ள த்ரிஷாவின் 8 போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் எதை பார்ப்பது என்றே தெரியவில்லை எனவும் கமெண்டுகளால் நிரப்பி வருகின்றனர். த்ரிஷாவின் இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram A post shared by Trish (@trishakrishnan)

பொன்னியின் செல்வன் திரைப்படம் த்ரிஷாவின் சினிமா கெரியரில் முக்கிய படமாக பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் த்ரிஷா. இப்படத்தில் த்ரிஷாவின் நடிப்பை பார்த்த சினிமா ரசிகர்கள், பொன்னியின் செல்வன் படம்தான் த்ரிஷா நடிப்பில் வெளியான படங்களில் பெஸ்ட் என குறியிருந்தார். அதோடு படம் முழுக்கவும் அழகு பதுமையாக வலம் வந்தார் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.