இயக்குநர் விக்னேஷ் சிவன் குடும்பத்துடன் மும்பையில் முகாமிட்டுள்ளதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
நயன்தாரா விக்னேஷ் சிவன்நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த ஞாயிற்றுக் கிழமை மும்பைக்கு புறப்பட்டனர். இருவரும் மும்பை விமான நிலையத்தில் கூலாக நடந்து செல்லும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது. இந்நிலையில் நேற்று நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களின் குழந்தைகளுடன் மும்பை விமான நிலையத்தில் நடந்து சென்ற வீடியோக்கள் வெளியானது. Actress: கல்யாணமானதை மறந்து ரெண்டு எழுத்து நடிகரே கதி என கிடக்கும் நடிகை…
குழந்தைகளுடன்அப்போது குழந்தைகளின் முகம் வெளியே தெரியாதப்படி கவனமாக பார்த்துக் கொண்டனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும். நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை நயன்தாரா மும்பை சென்தாக கூறப்பட்டது. Trisha, Ponniyin Selvan 2: வெறித்தனம்.. குந்தவை த்ரிஷாவின் அசர வைக்கும் லுக்ஸ்!
ஏகே 62இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் குழந்தைகளுடன் மும்பையில் முகாமிட்டுள்ளதற்கான தகவல் வெளியாகியுள்ளது. அதவாது அஜித்தின் ஏகே 62 படத்தை லைகா புரடெக்ஷன் தயாரிக்க விக்னேஷ் சிவன்தான் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் கூறிய கதை செட் ஆகாததால் விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
ப்ச்… அந்த கொடுப்பனை இல்ல… பாவம்தான் தனுஷ்!
விஜய் சேதுபதிஇதனை தொடர்ந்து ஒரு ஹிட் படத்தை கொடுத்து தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இதற்காக தான் தயார் செய்துள்ள கதையில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க இருப்பதாகவும், அதற்கு விஜய் சேதுபதியும் ஓகே சொல்லி விட்டதாக தகவல் வெளியானது.
Samantha, LR Eswari: பாட்டா அது… சமந்தாவின் ‘ஊ சொல்றியா’ பாடலை கழுவி ஊற்றிய எல்ஆர் ஈஸ்வரி!
பேன் இந்தியா படம்இந்நிலையில் விஜய் சேதுபதிக்காக தான் தயார் செய்துள்ள கதையை ஒரு பேன் இந்தியா படமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம் விக்னேஷ் சிவன். அந்தப் படத்தில் அபிஷேக் பச்சனை நடிக்க வைக்கவும் ஆசைப்படுகிறாராம் விக்னேஷ் சிவன். கேங்ஸ்டர் படமாக இது உருவாக உள்ள இந்த படத்திற்கு பாலிவுட்டின் பிரபல எழுத்தாளர் ஒருவர் கதை எழுத இருப்பதாக கூறப்படுகிறது.
Bala health update: ஐசியூவில் நடிகர் பாலா.. இப்போ எப்படி இருக்கார்? முதல் முறையாக பேசிய மனைவி!
மும்பையில் முகாம்இதற்காகதான் விக்னேஷ் சிவன் தற்போது குடும்பத்துடன் மும்பையில் முகாமிட்டுள்ளாராம். விக்னேஷ் சிவன் மும்பையில் இருக்கும் போட்டோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் விக்னேஷ் சிவனின் பேன் இந்தியா படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்கவும் விக்னேஷ் சிவன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. Dhanush: நான் நம்பின 3 பேரும் என்னை ஏமாத்திட்டாங்க… உருக்கமாக பேசிய தனுஷ்!
Ajith Vignesh Shivan