Vijay, SA Chandrasekhar: வேணாம்பானு கெஞ்சிய விஜய், கட்டாயப்படுத்திய எஸ்.ஏ.சி.: நடந்தது என்ன?

Vijay hit movies: தன் மகன் விஜய் முடியாது என்று கூறியும் அவர் பேச்சை கேட்காமல் எஸ்.ஏ.சந்திரசேகர் செய்த காரியம் நல்லதாப் போச்சு.

​விஜய்​விஜய்யை திரையுலகில் அறிமுதம் செய்து வைத்தார் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர். விஜய் ஹீரோவாக அறிமுகமான புதிதில் அவர் தொடர்ந்து எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் தான் நடித்து வந்தார். விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக படத்தில் நடித்த பிறகே விஜய்யின் கெரியர் வேற லெவலுக்கு சென்றது. இருப்பினும் விஜய் படங்களை தொடர்ந்து இயக்கி வந்தார் எஸ்.ஏ. சந்திரசேகர். இது தவிர்த்து விஜய்க்காக கதையும் கேட்டு வந்தார்.
​நினைத்தேன் வந்தாய்​விஜய், தேவயானி, ரம்பா நடிப்பில் கடந்த 1998ம் ஆண்டு வெளியான நினைத்தேன் வந்தாய் படம் சூப்பர் ஹிட்டானது. விஜய்யை ரசிகர்கள் கொண்டாடினார்கள். செல்வ பாரதி இயக்கிய அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என அடம்பிடித்திருக்கிறார் விஜய். பெல்லி சந்தடி என்கிற தெலுங்கு படத்தின் ரீமேக் தான் அந்த நினைத்தேன் வந்தாய்.
​அப்பா​பெல்லி சந்தடி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய எஸ்.ஏ. சந்திரசேகர் அது குறித்து மகனிடம் தெரிவித்திருக்கிறார். ரொம்ப பழைய கதையா இருக்கேப்பா, இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்றாராம். அதற்கு எஸ்.ஏ.சந்திரசேகரோ, நீ கண்டிப்பாக இந்த படத்தில் நடிக்க வேண்டும். படம் ரிலீஸானால் அனைவரும் உன்னை பற்றியே பேசுவார்கள். உன் சம்பளம் உயரும் என்றாராம். இதையடுத்து அப்பா கட்டாயப்படுத்தியதால் நடித்திருக்கிறார் விஜய். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

​கட்டாயம்​பவித்ர பந்தம் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய எஸ்.ஏ. சந்திரசேகர் அந்த படத்தில் நடிக்குமாறு விஜய்யிடம் கூறியிருக்கிறார். அதற்கு விஜய்யோ, இந்த படத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் தான் வலுவாக இருக்கிறது. எனக்கு இஷ்டமில்லை என்றாராம். அதெல்லாம் முடியாது விஜய், நீ நடித்தே ஆக வேண்டும். படம் ஹிட்டாகும், உன் சம்பளம் உயரும் என்று கூறியிருக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகர்.
​ப்ரியமானவளே​அப்பா சொன்னதால் பாதி மனதுடன் நடித்திருக்கிறார் விஜய். அந்த படம் தான் ப்ரியமானவளே. படம் பார்த்தவர்கள் சிம்ரனை மட்டும் அல்ல ஹீரோ விஜய்யையும் கொண்டாடினார்கள். படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. குடும்ப ஆடியன்ஸ் ப்ரியமானவளே படத்தை கொண்டாடினார்கள். உண்மையான குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக அமைந்தது.
​மகன்​விஜய் தனக்கு பிடிக்காவிட்டாலும் அப்பா சொன்னதற்காக நடித்த நினைத்தேன் வந்தாய், ப்ரியமானவளே படங்கள் சூப்பர் ஹிட்டாகின. விஜய்க்கு எந்த கதை செட்டாகும் என்பது எஸ்.ஏ. சந்திரசேகருக்கு தான் நன்கு தெரியும் என்கிறார்கள் ரசிகர்கள். விஜய்க்கும், அப்பாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்ட பிறகு தனக்காக அவரை கதை கேட்க வைப்பதை நிறுத்திவிட்டார் தளபதி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.