கடலூர்: கொள்ளிடத்தில் இருந்து கடலூருக்கு போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வல்லம்படுக்கையில் இருந்து கடலூருக்கு தலா 5 அரசு பேருந்துகளின் இருபுறமும் போலீசார் பாதுகாப்புக்காக சென்றுள்ளனர்.
உளுந்தூர் பேட்டையிலிருந்து விருத்தாச்சலம் செல்லும் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுகின்றன. என்.எல்.சி.க்கு எதிராக பாமக முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இதன் காரணமாக குறைவான பேருந்துகள் இயக்கப்படுகிறது. போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படாததால் கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் அவதியடைந்துள்ளனர்.
கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. 9 மணிக்கு மேல் திறக்கப்படும் துணி, நகை மற்றும் பத்திரக்கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டுள்ளன. தேநீர் கடை, மெடிக்கல் ஷாப், காய்கறி கடை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டன.