கோவை விமான நிலையத்தில் 3.8 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து ஷார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் கோவை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் 11 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்ததில், அவர்களின் பைகள், காலணிகள் மற்றும் மலக்குடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த ரூபாய் 3.8 கோடி மதிப்பிலான 6.68 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம் கடத்தி வந்த 11 பேரை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கைது செய்து, இந்த தங்கம் கடத்தல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றது.