
சினிமா டப்பிங் யூனியனுக்கு சீல்
தென்னிந்திய டப்பிங் யூனியனின் தலைவராக நடிகர் ராதாரவி இருக்கிறார். பொதுச்செயலாளராக கதிரவனும், பொருளாளராக சீனிவாச மூர்த்தியும் இடம் பெற்றுள்ளனர். இந்த யூனியன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள 80 அடி சாலையில் உள்ளது. இது அமைந்துள்ள கட்டடம் அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து நடைபெற்ற விசாரணைக்கு பிறகும் ராதாரவி தரப்பில் இருந்து தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லையாம். அதனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று தென்னிந்திய டப்பிங் யூனியன் வளாகத்திற்கு சீல் வைத்திருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை தமிழ் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.