சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக சிறைக்கைதி ஒருவர் கருணைக்கொலை…


சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக கைதி ஒருவர் கருணைக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

கைதிக்கு கருணக்கொலைக்கு அனுமதி

சுவிட்சர்லாந்தின் Zug மாகாணத்தில், மருத்துவர்கள் உதவியுடன் சிறைக்கைதி ஒருவர் தன் வாழ்வை முடித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், பெல்ஜியம் நாட்டிலுள்ள Nivelles என்னுமிடத்தில் தன் ஐந்து பிள்ளைகளையும் கொலை செய்த Genevieve Lhermitte (56) என்னும் பெண், மருத்துவர்கள் உதவியுடன் கருணைக்கொலை செய்யப்பட அனுமதி வழங்கப்பட்ட விடயம் நினைவிருக்கலாம்.

தற்போது, சுவிட்சர்லாந்தில் முதன்முறையாக Bostadel சிறையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், மருத்துவர்கள் உதவியுடன் வாழ்வை முடித்துக்கொள்ள உதவும் நிறுவனமான EXIT என்னும் நிறுவனத்தில் தன் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார்.

சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக சிறைக்கைதி ஒருவர் கருணைக்கொலை... | Prisoner Ends Life In Zug

பிப்ரவரி 28ஆம் திகதி அவர் கருணைக்கொலை செய்யப்பட்டார்.

ஒருவர் கைதியாகவே இருந்தாலும், தன் விருப்பப்படி தன் வாழ்வை முடித்துக்கொள்ள அவருக்கும் உரிமை உள்ளது என முடிவு செய்யப்பட்டதன்பேரில் அவர் கருணைக்கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.