
யாருக்காகவும் மாற வேண்டியதில்லை – ராஷ்மிகா
தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது புஷ்பா 2 மற்றும் அனிமல் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அழகு தொடர்பாக இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது: ‛‛அழகுக்கு என்று யாரையும் உதாரணமாக சொல்ல முடியாது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான அழகு இருக்கும். கண்ணாடி முன்பு நான் நிற்கும்போது ஆரோக்கியமாகவும், உடல் பிட்டாகவும் இருக்கிறேனா என்று தான் பார்ப்பேன். சிலர் சற்று குண்டாக இருந்தால் அழகாக இருப்பார்கள். யாருக்காகவும் நம்மை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் தேவையை கருதி மாற்றிக் கொள்ளலாம். நான் எனது உடலை பயிற்சியாளர் ஒருவரின் ஆலோசனைப்படி கேட்டு பிட்டாக வைத்துக் கொள்கிறேன்'' என்றார்.