Meera Mithun, Vijay: 'அவன் என்ன நடிச்சு கிழிச்சிட்டான்?' விஜய்யை ஒருமையில் தாறுமாறாய் விளாசிய மீரா மிதுன்!

நடிகை மீரா மிதுன் நடிகர் விஜய்யை ஒருமையில் தாறுமாறாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீரா மிதுன்பிரபல மாடலாக இருந்தவர் நடிகை மீரா மிதுன். 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் , போதை ஏறி புத்தி மாறி உள்ளிட்ட சில படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன், சக போட்டியாளர்களிடம் வாக்கு வாதம் செய்வது சண்டை போடுவது என இருந்து வந்தார்.
​ Ajith, AK 62: ஏகே 62க்காக எடையை குறைத்த அஜித்? க்ளீன் ஷேவ்.. கூல் லுக்… துள்ளிக் குதிக்கும் ரசிகாஸ்!​
பிக்பாஸ்மேலும் சக போட்டியாளரான இயக்குநர் சேரன் தன்னை தவறான நோக்கத்தில் தொட்டதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார். இதையடுத்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக குறும்பம் போட்ட நடிகர் கமல்ஹாசன் மீரா மிதுன் கூறியதை பொய் என நிரூபித்தார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மீரா மிதுன், நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன், சேரன், முகேன் ராவ், தர்ஷன் என பலரையும் விளாசி வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
​ Nayanthara: லெஜண்ட் அண்ணாச்சி படத்தில் நயன்தாரா? ரகசியம் உடைத்த இயக்குநர்கள்!​
அவதூறு பேச்சுஅதோடு நடிகர்கள் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா, நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா ஆகியோரையும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். இதனால் கடுப்பான அவர்களின் ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைதளங்களில் வச்சு செய்தனர். பலர் மீரா மிதுனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் கூட ஒட்டினர். அதனை தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு பட்டியலினத்தவர்கள் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவதூறாக பேசியிருந்தார் நடிகை மீரா மிதுன்.
​ அதில் சமரசம் செய்யாத ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!​
தலைமறைவுஇதையடுத்து நடிகை மீரா மிதுன் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலையான இவர்களுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜாமீனில் வெளியே வந்த பிறகு நடிகை மீரா மிதுன் மீண்டும் ஆஜராகவில்லை. அடிக்கடி இருக்கும் இடத்தை மாற்றிக்கொண்டு அவர் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
​ Naresh, Pavithra Lokesh: 2 முறை விவாகரத்தான நடிகையை 4வது திருமணம் செய்த சூப்பர் ஸ்டாரின் அண்ணன்!​
மீரா மிதுன் வீடியோசமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மீரா மிதுன், சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாகவும் குடும்பத்தினர் கூட உதவி செய்யவில்லை என்றும் கண்ணீர் விட்டார். இந்நிலையில் நடிகை மீரா மிதுனின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அதில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் மீரா மிதுன். அப்போது நெறியாளர் மீரா மிதுனை நடிகர் விஜய்யுடன் ஒப்பிட்டு பேசுகிறார்.
​ Aishwarya Rajinikanth: திடீரென செல்வா அத்தானை சந்தித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… காரணம் இதுதானாம்!​
என்ன கிழிச்சிட்டான்?இதைக்கேட்டு கடுப்பான மீரா மிதுன், கெட்ட வார்த்தையில் ஆபாசமாக பேசுகிறார். ஆனால் நெறியாளர் விஜய்யின் ஸ்டார்டம் எவ்வளவு பெரியது தெரியுமா என விளக்குகிறார். அப்போது குறுக்கிடும் மீரா மிதுன், என்ன பெரிய ஸ்டார்டம்ல இருந்து கிழிச்சிட்டான் அவன்? நானும் அவனும் ஒன்னா? அவன் படம் எல்லாமே ஃபிளாப். அவனை நேஷனலி இண்டர்நேஷனலி யாருக்குமே தெரியாது என தாறுமாறாய் பேசியுள்ளார். மீரா மிதுனின் இந்த பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
​மீரா மிதுன் வீடியோ
Meera Mitun Vijay

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.