பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் தாய் சினேகலதா காலமானார்.
அழகே பொறமைப்படும் பேரழகுக்கு சொந்தக்காரி மாதுரி தீக்ஷித் என ரசிகர்கள் அவரை இப்போதும் கொண்டாடி வருகின்றனர். சீனியர் நடிகை ஆகி விட்டாலும், இன்னமும் சிறப்பான ரோல்களில் பாலிவுட்டில் நடித்து கெத்துக் காட்டி வருகிறார். அதே போல வெப்சீரிஸ்களிலும் மாதுரி தீக்ஷித் மாஸ் காட்டி வருகிறார்.மாதுரி தேஜாப், தேவதாஸ், தில் தோ பாகல் ஹை, ஹம் ஆப்கே ஹைன் கவுன், கல்நாயக், சாஜன், போன்ற வெற்றிப் படங்களில் நடித்த மாதுரி இறுதியாக ‘ஃபேம் கேம்’ வெப் சீரிஸ் நடித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை 8.40 மணியளவில் வயது மூப்பின் காரணமாக பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் தாயார் சினேகலதா காலமானார்.இன்று மாலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும் என மாதுரி தீட்சித் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மாதுரி தாயார் மறைவிற்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.