புலம்பெயர் தொழிலாளர் தாக்குதல் வழக்கில் இந்து முன்னணி நிர்வாகி கைது!!

புலம் பெயர் தொழிலாளர்களை தாக்கிய வழக்கில் இந்து முன்னணி நிர்வாகி உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கபட்டவரில் ஒருவர் வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட சூரிய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன் ஆகிய நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மேற்கு வங்க புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு குறித்து அரசு மற்றும் காவல் துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்று நடந்த சம்பவத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பவம் நடைபெற்ற போது கைது செய்யபட்டவர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர்.

இந்த வழக்கில் பிரகாஷ் என்பவர் இந்து முன்னணி அமைப்பில் இருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது செல்போனில் அதற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளன. மேலும் இதில் சூர்யா என்கின்ற முருகன் ஏற்கனவே இந்து முன்னணியில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர் புலன் விசாரணை நடைபெற்ற வருகிறது. மேலும் ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காவல்துறையினரே தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள் அளிக்கப்பட்டுள்ளது. இல்லை என்றாலும் சம்பந்தப்பட்ட நபர்களுடன் உடனடியாக 100க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.