மழை பெய்த போது லட்சக்கணக்கான புழுக்களும் சேர்ந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கொரோனாவை தொடர்ந்து உலக அளவில் சீனா பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கொரோனா வைரஸ் சீனா திட்டமிட்டு பரவவிட்டது என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் அதை சீனா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்நிலையில் பெய்ஜிங்கில் திடீரென ஒரு நாள் புழுக்கள் மழை பெய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழைக்குப் பிறகு பல இடங்களில் வாகனங்கள், கடைகள், தெருக்களில் புழுக்கள் அதிக அளவில் காணப்பட்டன.
அவற்றில் பூச்சிகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மழை பெய்த போது மழைநீரோடு சேர்ந்து புழுக்களும் கொட்டியதாக தெரிகிறது. அவை புழுக்கள் இல்லை, கம்பளிப் பூச்சிகள் என்று சிலர் கூறுகின்றனர்.
வசந்த காலத்தின் தொடக்கத்தில் இப்படி நிகழும் என்று கூறினாலும், மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். எதனால் இப்படி நிகழ்ந்தது என்பது குறித்து பருவநிலை தொடர்பான வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பலத்த காற்று அடிக்கும் போது, எங்காவது வனப்பகுதியில் கூட்டம் கூட்டமாக இருந்த புழுக்கள் அடித்து வரப்பட்டு இப்படி கொட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சீனாவில் புழு மழை பெய்தது தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
newstm.in