ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியின் நிலை குறித்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவீந்திரநாத் குமார் மற்றும் கனிமொழி ஆகியோர் எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு தொல்லியல் துறைக்கு 5.25 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளதாகவும், அருங்காட்சியகம் கட்ட சிறந்த கட்டிடக்கலை நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வெகு விரைவில் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் கிருஷ்ண ரெட்டி விளக்கம் அளித்துள்ளார்.