Ajith:மகள், மகன், ஷாலினியுடன் செம ஸ்டைலிஷ் லுக்கில் அஜித்: தீயாய் பரவிய போட்டோ

படப்பிடிப்பு இல்லாவிட்டால் அஜித் குமார் செய்வது இரண்டே இரண்டு விஷயம் தான். ஒன்று தன் ஸ்போர்ட்ஸ் பைக்கை எடுத்துக் கொண்டு ரைடு சென்றுவிடுவார். இரண்டு, தன் குடும்பத்தாருடன் நேரம் செலவிடுவார்.

இது கோலிவுட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். தற்போது படப்பிடிப்பு எதுவும் இல்லாத நிலையில் மனைவி ஷாலினி, மகன் ஆத்விக், மகள் அனௌஷ்காவுடன் வெளியே சென்றிருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஷாலினி.

உடல் எடையை குறைத்து ஷார்ட்ஸ், சட்டை, ஷூ, கூலிங் கிளாஸில் மாஸாக இருக்கிறார் அஜித். ஷாலினி வழக்கம் போன்று சிம்பிளாகவும், ஸ்டைலாகவும் இருக்கிறார். தான் ஒரு கால்பந்தாட்ட ரசிகன் என்பதை நிரூபிக்கும் வகையில் உடை அணிந்திருக்கிறார் ஆத்விக்.

View this post on Instagram A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)
அனௌஷ்கா லூசான ஜீன்ஸ், சட்டையில் இருக்கிறார். ஷாலினி வெளியிட்ட அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸுகள் வந்து குவிந்துவிட்டது. பிரபலங்களும், ரசிகர்களும் கமெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

அழகான குடும்பம். இது ஏன் ஏ.கே. 62 பட லுக்கா?. நன்றாக இருக்கிறது. குட்டி தல அப்படியே அப்பா மாதிரி என தெரிவித்துள்ளனர்.

Ajith: அஜித்தை உரிச்சு வச்சிருக்கும் மகன் ஆத்விக், தல மாதிரியே ஃபுட்பால் ரசிகன்: வைரல் வீடியோ

அண்மையில் தான் சென்னையின் எஃப்சி அணி விளையாடிய போட்டியை காண மகன் ஆத்விக்குடன் ஸ்டேடியத்திற்கு வந்திருந்தார் ஷாலினி. ஸ்டேடியத்தில் ஷாலினியை பார்த்த சென்னையின் எஃப்.சி. அணியின் இணை உரிமையாளரான பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சன் தானாக வந்து அவரிடம் பேசினார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. அஜித்தை போன்றே ஆத்விக்கிற்கும் கால்பந்தாட்டம் பிடித்திருக்கிறது. அபிஷேக் பச்சன் மரியாதை தெரிந்த மனிதர் என்றார்கள் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கெரியரை பொறுத்தவரை மகிழ்திருமேனி இயக்கத்தில் ஏ.கே. 62 படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித் குமார். முன்னதாக அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் கதை பிடிக்கவில்லை என்று கூறி விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டார்கள்.

Ajith: 21 வருஷமா வடிவேலுவை ஒதுக்கும் அஜித்: காரணம் அவர் சொன்ன ஒத்த வார்த்தை

ஏ.கே. 62 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். அந்த படத்தை இயக்க மகிழ் திருமேனிக்கு ரூ. 10 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். மகிழ்திருமேனியின் கெரியரிலேயே இது தான் அதிகபட்ச சம்பளம் ஆகும்.

மேலும் ஏ.கே. 62 படத்தில் நடிக்க அஜித் குமாருக்கு ரூ. 105 கோடி சம்பளமாம். ஏ.கே. 62 படத்தை மகிழ்திருமேனி இயக்குவது உறுதியாகிவிட்டது. இருப்பினும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு வரும் என்றார்கள். ஆனால் இரண்டாவது வாரமும் முடியப் போகிறது இதுவரை அறிவிப்பு வரவில்லை.

மெகா அறிவிப்பு வருகிறது என்று லைகா எப்பொழுது ட்வீட் செய்தாலும் அது ஏ.கே. 62 படம் குறித்த அறிவிப்பு தான் என அஜித் ரசிகர்கள் நம்புகிறார்கள். ஆனால் அது லைகா நிறுவனம் தயாரித்து வரும் பிற படங்கள் குறித்த அறிவிப்பாகவே உள்ளன.

ஏ.கே. 62 பட அறிவிப்பு வருமா, வராதா, ஏன்யா இப்படி பாடா படுத்துறீங்க என அஜித் குமார் ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.