Bloddy Sweet லோகேஷ் கனராஜ்! வங்கி ஊழியர் டூ பான் இந்தியா இயக்குநர்! சாதித்தது எப்படி?

கோயம்புத்தூர் காரரான லோகேஷ் கனகராஜ் படித்து முடித்துவிட்டு வங்கியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது கார்ப்பரேட் குறும்பட போட்டியில் அவர் கலந்து கொண்டு ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். அந்த குறும்படத்தை நடுவராக வந்த கார்த்திக் சுப்புராஜ் பார்த்து பிரம்மித்துள்ளார். உடனே லோகேஷை நேரில் அழைத்து படங்களை இயக்க ஊக்கப்படுத்தியுள்ளார்.  கார்த்திக் சுப்புராஜின் பேச்சால் ஈர்க்கப்பட்ட லோகேஷ் தனது வங்கி வேலையை ராஜினாமா செய்துள்ளார். 2016-ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் 5 குறும்படங்களை கொண்டு உருவான அவியல் படத்தில் ஒன்றை லோகேஷ் இயக்கினார். இப்படி தான் இவரின் சினிமா பயணம் தொடங்கியது. உடனே மாநகரம் படத்தை இயக்கினார். சத்தமே இல்லாமல் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்தப்படம் மிகப்பெரிய அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. முதல் படத்திலேயே தனக்கு கிடைத்த வாய்ப்பை வெற்றியாக மாற்றினார். மாநகரம் படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் நிறுவனம் மீண்டும் லோகேஷுக்கு வாய்ப்பு கொடுத்தது. 

தனது இரண்டாவது படமான கைதியில் நடிகர் கார்த்திக்கை இயக்கி இருந்தார். கார்த்திக் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த நேரத்தில் அவருக்கு தேவையான வெற்றியை மீண்டும் தொடங்கி வைத்தது லோகேஷ் தான்.  கைதி படம் விஜய்யின் பிகில் படத்துடன் வெளியானது. விஜய்யின் படத்துடன் மோதுவது எல்லாம் அவ்வளவு எளிதல்ல. ஆனால் அந்த ரேசிலும் கோப்பையை வென்றார் லோகேஷ். கைதி படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற பாலிவுட் வரை கடும் போட்டி நிலவியது. இப்போது இந்தப்படம் பாலிவுட்டில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு காத்திருக்கிறது.  இந்தப்படத்துக்கு பிறகு விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படம் வெளியானது. பல இளம் இயக்குநர்களின் கனவான விஜய்யை இயக்கும் வாய்ப்பு தனது மூன்றாவது படத்திலேயே இவருக்கு கிடைத்தது. மாஸ்டர் படம் வெளியாகி பட்டையை கிளப்பியது. வசூலிலும் அசத்தியது.

இந்த படத்துக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய விக்ரம் படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து தமிழ் சினிமாவின் இமேஜை இந்திய அளவில் உயர்த்தியது. விஸ்வரூபம் படத்துக்குப் பிறகு எந்த படமும் ஹிட் ஆகாத நிலையில், கமல்ஹாசனுக்கு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு ஓபனிங் ஆக அமைந்தது விக்ரம். ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி என பலர் இந்தப்படத்தில் நடித்திருந்தார்கள். எதிர்பாராத வெற்றியையும் உத்வேகத்தையும் இந்தப்படம் தமிழ் சினிமாவுக்கு கொடுத்தது. தனது நான்காவது படத்திலேயே பான் இந்தியா இயக்குநராக உயர்ந்தார் லோகேஷ். மீண்டும் இப்போது விஜய்யை வைத்து லொயோ படத்தை இயக்கி வருகிறார். கேங்ஸ்டர் படங்கள் எத்தனையே தமிழ் சினிமாவி வெளிவந்துள்ளது. ஆனால் லோகேஷ் angle-ல் இதுவரை யாரும் கேங்ஸ்டர் படங்களை எடுக்கவில்லை என்றால் அது மிகையல்ல. 

மார்வெல் யூனிவர்ஸ் எப்படி உலக அளவில் பிரபலமோ அதே போல லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் இந்திய அளவில் பிரபலம். அவரின் லியோ படம் குறித்த போட்டோக்களும், அப்டேட்டுகளும் தான் ட்விட்டரை தினமும் திணறடிக்கிறது. விஜய்யுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள லோகேஷ் எப்படியும் இந்த முறை தனது வெற்றியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வார். தெலுங்கு, பாலிவுட் என பிற மொழியின் முன்னணி நடிகர்கள் இவர் இயக்கத்தில் நடிக்க காத்துக்கிடக்கின்றனர். இதுவே சினிமா மீதான இவர் காதலின் வெற்றி. தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுக்க வாழ்த்துக்கள் லோகேஷ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.