ஆணுறுப்பின் மேல்தோல், பின்னுக்குத் தள்ளமுடியாத பிரச்னை; காரணமும் தீர்வும்! #VisualStory

male

ஆணுறுப்பின் மேல்தோலை பின்னுக்குத் தள்ளி சுத்தம்செய்வது மிகமிக அவசியம். இல்லையென்றால், ஆணுறுப்பில் கிருமித்தொற்று ஏற்படும்.

மருத்துவர்கள்

ஆணுறுப்பு கிருமித் தொற்றால், சம்பந்தப்பட்டவரின் இணைக்கும் பிறப்புறுப்பில் கிருமித்தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சில ஆண்களுக்கு ஆணுறுப்பின் முன்தோலை பின்பக்கமாக இழுக்க முடியாத பிரச்னை இருக்கிறது.

பொதுவாக ஆணுறுப்பின் மேல்தோலை முன்னும் பின்னும் நகர்த்த முடியும். சிலருக்கு மட்டும் பிறவிக்குறைபாடு காரணமாக மேல்தோலானது ஆணுறுப்பின் முன்பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

Couple

அத்தகைய ஆண்கள் திருமணமாகி தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது, அதனை கடினமாக உணர்வார்கள்.

worried couple

சிலருக்கு, முதலிரவின்போது ஆணுறுப்பின் முன்தோல் வலிந்து பின் தள்ளப்படுவதால் கிழிந்துபோகவும், கிழியும்போது ரத்தம் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

Medical Prescription

ஆணுறுப்பின் மேல்தோலை பின்னுக்குத் தள்ள முடியாத பிரச்னை இருந்தால், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து, தேவைப்பட்டால் அதற்கான அறுவை சிகிச்சையைச் செய்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்னைக்கு இதுதான் தீர்வு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.