புதுடில்லி, டி.ஆர்.டி.ஓ., தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்டுள்ள, கதிரியக்கம் மற்றும் அணுசக்தி அவசரநிலை சிகிச்சைக்கு பயன்படும் அரியவகை மருந்தை விற்பனை செய்ய டி.சி.ஜி.ஐ., ஒப்புதல் அளித்துள்ளது.
டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்களை தயாரித்து அளித்து வருகிறது. இந்த அமைப்பின் கீழ், ஐ.என்.எம்.ஏ.எஸ்., எனப்படும் அணு மருத்துவம் மற்றும் அது சார்ந்த அறிவியல் தொழில்நுட்ப நிறுவனமும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த, ஐ.என்.எம்.ஏ.எஸ்., நிறுவனம் புதிய மருந்தொன்று கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்து கதிரியக்கம் மற்றும் அணுசக்தி அவசரநிலை சிகிச்சைகளுக்கு பயன்படுகிறது.
‘ப்ரூடிகார் டிஎம்’ மற்றும் ‘ப்ரூடிகார்ப் எம்ஜி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இரண்டு மருந்துகளின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு டி.சி.ஜி.ஐ., எனப்படும், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான உரிமம் ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த, ‘ஸ்காட்எடில் பார்மாசியா’ மற்றும் குஜராத்தை சேர்ந்த ‘ஸ்கன்டர் லைப்சயின்ஸ்’ நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement